செய்திகள்
ஷாகீன் பாக் போராட்டம்

டெல்லி தேர்தல் முடிந்தவுடன் ஷாகீன் பாக் போராட்டம் குறித்த மனு மீதான விசாரணை - சுப்ரீம் கோர்ட்

Published On 2020-02-07 12:49 GMT   |   Update On 2020-02-07 12:49 GMT
டெல்லி சட்ட சபை தேர்தல் முடிந்த உடன் ஷாகீன் பாக் போராட்டம் குறித்து தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை நடைபெறும் என சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:

குடியுரிமை திருத்தச்சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கு எதிராக டெல்லி ஷாகீன் பாக் பகுதியில் கடந்த டிசம்பர் 15-ம் தேதி முதல் போராட்டம் நடைபெற்றுவருகிறது. 

இந்த போராட்டத்தால் கலின்டி - ஷாகீன் பாக் சாலை பகுதியில் வாகனங்கள் நுழைய தடை விதிக்கப்பட்டு போக்குவரத்து சேவை  துண்டிக்கப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. 

இதற்கிடையில், ஷாகீன் பாக் போராட்டத்தால் சாலை போக்குவரத்து பாதிக்கப்படுவதாகவும், ஆகவே போராட்டக்காரர்களை உடனடியாக அப்புறப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையுடன் டெல்லி ஹைகோர்ட்டில் கடந்த மாதம் மனு தாக்கல் செய்யப்பட்டது. 

இந்த மனுவை கடந்த மாதம் 14-ம் தேதி விசாரிந்த கோர்ட் ஷாகீன் பாக்கில் போராட்டத்தில் சட்ட ஒழுங்கு பிரச்சனை எதுவும் ஏற்படாத வகையில் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.

இந்நிலையில், டெல்லி ஹைகோர்ட்டின் உத்தரவை எதிர்த்து கலின்டி - ஷாகீன் பாக் சாலையில் சுமூகமாக போக்குவரத்து வாகனங்கள் இயங்க வழிவகை செய்யும் வகையில் ஷாகீன் பாக் போராட்டக்கார்களை அப்புறப்படுத்த டெல்லி போலீசாருக்கு உத்தரவிட வேண்டுமேன சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்பட்டது. 



வழக்கறிஞர் அமித் சைனி மற்றும் டெல்லி முன்னாள் எம்.எல்.ஏ. நந்த் கிஷோர் ஹர்க் ஆகியோர் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு வந்தது. 

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், இந்த விவகாரத்தில் பிரச்சனை இருப்பதை நாங்கள் உணர்கிறோம். அந்த பிரச்சனைக்கு எவ்வாறு தீர்வு காண்பது என நாம் பார்க்க வேண்டும். இந்த மனு மீதான விசாரணையை திங்கள் கிழமை விரிவாக மேற்கொள்வோம் என தெரிவித்தனர். 

இதையடுத்து பேசிய மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் டெல்லியில் நாளை (பிப்ரவரி 8) சட்டசபைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது என தெரிவித்தார். 

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள்,'அதனால் தான் சொல்கிறோம் மனு மீதான விசாரணையை திங்கள் கிழமை பெற்கொள்வோம். நாம் ஏன் டெல்லி தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும்’ என தெரிவித்து வழங்கை ஒத்திவைத்தனர்.
Tags:    

Similar News