செய்திகள்
போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர்

பெண்களுக்கு எதிரான குற்றங்களை கண்டித்து பாஜக போராட்டம்

Published On 2020-02-07 08:08 GMT   |   Update On 2020-02-07 08:08 GMT
மேற்கு வங்காளத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை கண்டித்து அம்மாநில பாஜக தலைவர்கள் டெல்லி பாராளுமன்ற வளாகத்தில் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுடெல்லி:

பெண்களுக்கெதிரான குற்றங்கள் பற்றி சொல்லித்தெரிய வேண்டியதில்லை. அதிலும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் பெருகி வருவதாக பெண்கள் சமூகத்தினர் கவலை தெரிவித்து வருகின்றனர். சிறுமிகள் முதல் இளம்பெண்கள் வரை ஒரு சில கயவர்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர். பாலியல் குற்ற வழக்குகளில் நிலுவையில் உள்ளவை பல. 

நாட்டையே உலுக்கிய நிர்பயா சம்பவத்தில் குற்றவாளிகளாக தீர்ப்பளிக்கப்பட்டவர்களுக்கு தண்டனை நிறைவேற்றுவதில் எவ்வளவு இழுபறி உள்ளது என்பதையும் நாம் அறிவோம். பெண்களுக்கெதிரான குற்றங்களுக்கு எதிராக பல அரசியல் தலைவர்களும், பெண்கள் சங்கங்களும் குரல் கொடுத்து வருகின்றன. 

இந்நிலையில், மேற்கு வங்காளத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை கண்டித்து அம்மாநில பாஜக தலைவர்கள் டெல்லி பாராளுமன்ற வளாகத்தில் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். 

மேற்கு வங்காள மாநில பாஜக தலைவர் திலீப் கோஷ் மற்றும் அம்மாநிலத்தின் பிஷ்னுபூர் தொகுதி எம்.பி செளமித்ரா கான் உள்ளிட்ட சிலர் பாராளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

‘மேற்கு வங்க மாநிலத்தை ஆட்சி செய்ய ஒரு பெண்ணை தேர்ந்தெடுத்த போதிலும், மம்தா பானர்ஜி பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க தவறிவிட்டார்’ என திலீப் கோஷ் போராட்டத்தின் போது தெரிவித்தார். 

Tags:    

Similar News