செய்திகள்
ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு பதில் அளித்து பிரதமர் மோடி பேசிய காட்சி.

ராகுல் காந்தி டியூப்லைட்: பிரதமர் மோடி கிண்டல்

Published On 2020-02-07 02:20 GMT   |   Update On 2020-02-07 02:20 GMT
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வேலையில்லா திண்டாட்டம் குறித்து கேள்வி எழுப்பியதற்கு பிரதமர் மோடி, ராகுல் காந்தியை டியூப் லைட்டுக்கு ஒப்பிட்டு கிண்டலடித்தார்.
புதுடெல்லி :

பிரதமர் நரேந்திர மோடி நேற்று மக்களவையில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசியபோது, ‘‘இன்னும் 6 மாதங்களில் நாங்கள் மோடியை தடியால் அடிப்போம் என்று ஒருவர் (ராகுல் காந்தி) பேசி இருக்கிறார். இது கடினமானதாக இருக்கும் என்று கருதுகிறேன். எனவே இதற்கு 6 மாதங்கள் தயாராக வேண்டும். இந்த 6 மாதங்களில் நான் கூடுதல் சூரிய நமஸ்காரம் செய்ய வேண்டும். அப்போது அடி தாங்குவதற்கு எனது முதுகு தயாராகி விடும்’’ என்று கூறினார்.

அப்போது காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது இருக்கையில் இருந்து எழுந்து வேலையில்லா திண்டாட்டம் குறித்து கேள்வி எழுப்பினார்.

உடனே மோடி, ராகுல் காந்தியை டியூப் லைட்டுக்கு ஒப்பிட்டு கிண்டலடித்தார்.

அப்போது அவர், ‘‘நான் 30-40 நிமிடங்களாக பேசிக்கொண்டிருக்கிறேன். ஆனால் மின்சாரம் வர நீண்ட நேரமாகி விட்டது. பல டியூப் லைட்டுகள் இப்படித்தான் இருக்கின்றன’’ என்று கூறினார். அதன் அர்த்தம் உணர்ந்த ஆளும் பாரதீய ஜனதா கட்சி எம்.பி.க்கள் குபீர் என சிரித்தனர். இதனால் சபையில் சலசலப்பு ஏற்பட்டது.
Tags:    

Similar News