செய்திகள்
ராகுல் காந்தி மற்றும் பிரதமர் மோடி (கோப்பு படம்)

ஒன்றரை மணி நேர உரையில் 2 நிமிடம் கூட பிரதமர் மோடி வேலைவாய்ப்பு பற்றி பேசவில்லை - ராகுல் காந்தி

Published On 2020-02-06 12:24 GMT   |   Update On 2020-02-06 12:24 GMT
பிரதமர் மோடி பாராளுமன்றத்தில் நிகழ்த்திய ஒன்றரை மணி நேர உரையில் 2 நிமிடம் கூட இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு பற்றி பேசவில்லை என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

பாராளுமன்ற மக்களவையில் இன்று ஜனாதிபதியின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதிலளித்து பிரதமர் மோடி உரையாற்றினார். 

பிரதமர் மோடியின் உரையில் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியலமைப்பு சட்ட பிரிவு 370 ரத்து, முத்தலாக், ராமஜென்ம பூமி, இந்திய-வங்கதேச நில ஒப்பந்தம், கர்த்தார்பூர்-சாஹிப் வழித்தடம் உளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து தொடர்ந்து சுமார் ஒன்றரை மணி நேரம் பேசினார்.

இந்நிலையில், பிரதமர் மோடியின் பாராளுமன்ற உரையை காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடுமையான விமர்சனம் செய்துள்ளார். 

இது அவர் குறித்து பாரளுமன்ற வளாகத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசுகையில்,  ''நாட்டில் உள்ள அனைத்து இளைஞர்களும் தாங்கள் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக கல்வியை முடித்தவுடன் வேலை கிடைக்க வேண்டும் என விரும்புகின்றனர். நீங்கள் ஒன்றரை மணி நேரம் பாராளுமன்றத்தில் பேசியிருக்கிறீர்கள். 

நாட்டில் உள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க உங்கள் அரசு (பாஜக) என்ன செய்தது என்பது பற்றி 2 நிமிடங்கள் மட்டும் சொல்லும்படி பிரதமர் மோடியிடம் நாங்கள் கேட்டோம். 

ஆனால் வேலைவாய்ப்பு குறித்த கேள்விக்கு பிரதமர் மோடி எந்த பதிலையும் அளிக்கவில்லை என்பதை நீங்களும் (பத்திரிக்கையாளர்கள்) பார்த்தீர்கள், நாட்டு இளைஞர்களும் பார்த்தார்கள்’’ என அவர் தெரிவித்தார்.
Tags:    

Similar News