செய்திகள்
பினராயி விஜயன்

கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு - மாநில பேரிடராக அறிவித்தார் முதல்வர் பினராயி விஜயன்

Published On 2020-02-03 16:04 GMT   |   Update On 2020-02-03 16:04 GMT
மூன்று பேருக்கு உறுதி செய்யப்பட்டதால் கொடிய ஆட்கொல்லி வைரசான கொரோனாவை மாநில பேரிடராக கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்தார்.
கேரளா:

கொடிய உயிர்க்கொல்லி நோய் வைரஸ் சீனாவில் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் நோயால் 360-க்கும் மேற்பட்டோர்

பலியாகியுள்ளனர். உலகம் முழுவதும் ஏறக்குறைய இந்த வைரஸ் பரவியுள்ளது. பிலிப்பைன்சில் சிகிச்சை பெற்று வந்த சீனாவைச்

சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்தியாவில் இந்த வைரஸ் பரவாமல் இருந்தது. இந்திய அரசு உச்சக்கட்ட விழிப்புணர்வுடன் செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு

மாநிலமும் கவனம் செலுத்தி வருகிறது. சீனாவில் இருந்து வருபவர்களை தீவிரமாக கண்காணித்து வருகிறது.

இந்நிலையில்தான் கடந்த சில நாட்களுக்கு முன் வுகான் நகரில் இருந்து வந்த கேரளா மாணவி ஒருவருக்கு கொரோனா வைரஸ்

பாதிப்பு இருந்தது தெரிய வந்தது. இதனால் அவரை உடனடியாக தனிமைப்படுத்தி தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்நிலையில்

நேற்று ஒருவருக்கு வைரஸ் தாக்குதல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதற்கிடையில் இன்று 3-வது நபர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் கொரோனா வைரஸ்

பாதிப்பை மாநில பேரிடராக முதல்வர் பிணராயி விஜயன் அறிவித்துள்ளார்.
Tags:    

Similar News