செய்திகள்
தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள்

நிர்பயா வழக்கு - ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பிய குற்றவாளி அக்‌ஷய் தாக்குர்

Published On 2020-02-01 08:54 GMT   |   Update On 2020-02-01 08:58 GMT
நிர்பயா வழக்கில் தூக்குதண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளில் ஒருவரான அக்‌ஷய் தாக்குர் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு இன்று கருணை மனு அனுப்பியுள்ளார்.
புதுடெல்லி:

நிர்பயா கற்பழித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் 4 பேரையும் பிபர்வரி 1-ம் தேதி தூக்கில் போடுவதற்கு டெல்லி விசாரணை கோர்ட்டு உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து திகார் சிறையில் அதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தன.

இதற்கிடையே, நிர்பயா வழக்கில் தங்களுக்கு வழங்கப்பட்ட தூக்குத் தண்டனையை ரத்து செய்யக் கோரி வினய்குமார் சர்மா மற்றும் முகேஷ் சிங் ஆகியோர் ஜனாதிபதிக்கு கருணை மனுக்களை அனுப்பினர். அந்த கருணை மனுக்களை ஜனாதிபதி நிராகரித்துள்ளார்.

இந்நிலையில், தனது தண்டனையை ரத்து செய்யக்கோரி 4 குற்றவாளிகளில் ஒருவரான அக்‌ஷய் தாக்குர் இன்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு கருணை மனு அனுப்பினார்.

நிர்பயா வழக்கு குற்றவாளிகளுக்கு மறு உத்தரவு வரும் வரை தூக்கு தண்டனையை மீண்டும் நிறுத்திவைத்து டெல்லி பாட்டியாலா ஹவுஸ்  நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News