செய்திகள்
ராகுல் காந்தி

அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதே மோடிக்கு தெரியவில்லை - ராகுல்

Published On 2020-01-29 08:07 GMT   |   Update On 2020-01-29 08:07 GMT
பொருளாதாரத்தை பொருத்தவரை அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு தெரியவில்லை என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் வரும் பிரவரி 1ம் தேதி 2020-21ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை பாராளுமன்றத்தின் மக்களைவையில் தாக்கல் செய்ய உள்ளார். பல்வேறு சிறப்பம்சங்கள் இந்த பட்ஜெட்டில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில், பொருளாதாரத்தை பொருத்தவரை அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடிக்கும், நிதி மந்திரி நிர்மலா சீதாராமனுக்கும் தெரியவில்லை என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். 



‘முன்னதாக மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.5 சதவீதமாகவும் பணவீக்கம் 3.5 சதவீதமாகவும் இருந்தது. மோடியும் அவரது பொருளாதார ஆலோசனையாளர்களின் கனவுக் குழுவும் அதை மாற்றியுள்ளன. தற்போது உள்நாட்டு உற்பத்தி 3.5 சதவீதமாகவும், பணவீக்கம் அதிகரித்து 7.5 சதவீதமாகவும் உள்ளது. பிரதமர் மோடிக்கும், நிதி மந்திரி நிர்மலா சீதாராமனுக்கும்  அடுத்து என்ன செய்ய வேண்டும் என்றே தெரியவில்லை’ என தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Tags:    

Similar News