செய்திகள்
பாதுகாப்பு பணியில் ராணுவத்தினர்

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படை நடத்திய என்கவுண்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

Published On 2020-01-25 13:49 GMT   |   Update On 2020-01-25 13:49 GMT
ஜம்மு காஷ்மீரின் அவந்திபோரா பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு சென்ற பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது அவந்திபோரா பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

பயங்கரவாதிகள் நடமாட்டத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. புல்வாமா பகுதியில் கடந்த ஒரு வாரத்தில் நடைபெற்ற இரண்டாவது என்கவுண்டர் இது என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News