செய்திகள்
ராம்தேவுடன் பிரதமர் மோடி

அடுத்த 5 வருடங்களில் இந்தியாவில் எஃப்எம்சிஜி சந்தையில் நாங்கள்தான் ராஜா - பதஞ்சலி ராம்தேவ் பேச்சு

Published On 2020-01-24 14:07 GMT   |   Update On 2020-01-24 14:07 GMT
பாஸ்ட் மூவிங் கன்ஸ்யூமர் குட்ஸ் சந்தையில் பதஞ்சலி அடுத்த 5 வருடங்களில் இந்தியாவிலேயே மிகப்பெரிய நிறுவனமாக மாறும் என ராம்தேவ் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

இந்தியாவின் பாரம்பரிய உணவுப் பொருட்கள் மற்றும் இயற்கையான பொருட்களை குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும் என யோகா குரு ராம்தேவால் 2006-ம் ஆண்டு தொடங்கப்பட்ட நிறுவனமே பதஞ்சலி ஆகும். 

பிஸ்கட், கிரீம்கள், பற்பசை, ஆயுர்வேத மருந்துகள், நெய், எண்ணெய், சோப் உள்பட பாஸ்ட் மூவிங் கன்ஸ்யூமர் குட்ஸ் எனப்படும் மக்களின் தினசரி தேவைகளான பொருட்கள் ரசாயன கலப்பு இல்லாமல் விற்பனை செய்வதாக பதஞ்சலி தெரிவித்துள்ளது. 

அந்த நிறுவனம் தொடங்கப்பட்டு சில ஆண்டுகள் பதஞ்சலி பொருட்களின் விற்பனை குறைவாகவே இருந்தது. 



ஆனால், 2011-ம் ஆண்டு முதல் பதஞ்சலியின் பொருட்களின் விற்பனை அதிகரிக்க தொடங்கியது. விற்பனை அதிகமானதன் மூலம் எஃப்எம்சிஜி மட்டுமல்லாமல் ஆடை துறை உள்பட பல்வேறு துறைகளில் பதஞ்சலி தனது ஆதிக்கத்தை செலுத்தத் தொடங்கியது.

இந்நிலையில், நடப்பு நிதியாண்டின் இறுதிக்குள் (மார்ச் 2020) பதஞ்சலி நிறுவனம் 25 ஆயிரம் கோடி ரூபாய் வருமானத்தை ஈட்டும் என அந்நிறுவனத் தலைவரான ராம்தேவ் தெரிவித்துள்ளார். 

அதுமட்டுமல்லாமல் இந்தியாவில் தற்போது எஃப்எம்சிஜி துறையில் முதலிடத்தில் உள்ள இந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட்டை பின்னுக்கு தள்ளி அடுத்த 5 ஆண்டிற்குள் 50 ஆயிரம் கோடி ரூபாய் முதல் 1 லட்சம் கோடி ரூபாய் வரை வருவாயை ஈட்டி பதஞ்சலி முதலிடத்தை பிடிக்கும் என அவர் தெரிவித்தார்.   
Tags:    

Similar News