செய்திகள்
அரவிந்த் கெஜ்ரிவால்

காங்கிரஸ் கட்சிக்கு வாக்கு சேகரித்தாரா அரவிந்த் கெஜ்ரிவால்?

Published On 2020-01-24 05:18 GMT   |   Update On 2020-01-24 05:18 GMT
சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோவில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் காங்கிரஸ் கட்சிக்கு வாக்கு சேகரிக்கும் காட்சி இடம்பெற்றிருக்கிறது.



சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ ஒன்றில் அரவிந்த் கெஜ்ரிவால் வாக்காளர்களிடம் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்க கோரும் காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன. வைரல் பதிவுகளில் ஆம் ஆத்மி கட்சி, வாக்காளர்களிடம் இம்முறை காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்க கோரும் வகையிலான தலைப்பிடப்பட்டு இருக்கிறது.

வைரல் வீடியோவை ஆய்வு செய்ததில், இந்த வீடியோ மூன்று ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்டது என தெரியவந்துள்ளது. மேலும் வீடியோ எடிட் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த வீடியோவினை அரவிந்த் கெஜ்ரிவால் 2017-ம் ஆண்டு நடைபெற்ற பஞ்சாப் தேர்தலின் போது எடுத்தார்.



பஞ்சாப் தேர்தல் சமயத்தில் ஜனவரி 30, 2017-இல் அரவிந்த் கெஜ்ரிவால் ஃபேஸ்புக் நேரலையில் பேசினார். வீடியோவில் அவர், "கடந்த இரண்டு நாட்களாக அகாலி தளம் மற்றும் ஆர்.எஸ்.எஸ். கட்சியினர் வாக்காளர்களின் வீடுகளுக்கு சென்று, காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்க கோரிக்கை விடுப்பதாக கூறப்படுகிறது" என பேசினார். 

இதே வீடியோ பிப்ரவரி 2017-இல் வைரலானது. பின் அரவிந்த் கெஜ்ரிவால் ஃபேஸ்புக் நேரலையிலேயே அவர் காங்கிரஸ் கட்சிக்கு வாக்கு சேகரிக்கவில்லை என விளக்கம் அளித்தார். மேலும் வைரல் வீடியோ எடிட் செய்யப்பட்டது என்றும் அவர் தெரிவித்தார். அந்த வகையில் தற்சமயம் வைரலாகும் வீடியோ உண்மையில்லை என்றும் இது பழையது என்றும் உறுதியாகி இருக்கிறது.

போலி செய்திகளை பரப்பாதீர்கள். வலைத்தளங்களில் வரும் தகவல்களின் உண்மைத்தன்மை தெரியாமல் அவற்றை பரப்ப வேண்டாம். சமயங்களில் போலி செய்திகளால் உயிரிழப்பு உள்பட பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன.

Tags:    

Similar News