செய்திகள்
நேதாஜிக்கு பிரதமர் மோடி அஞ்சலி செய்த காட்சி

பிறந்த நாளில் மரியாதை செலுத்தினார் - நேதாஜிக்கு பிரதமர் மோடி புகழாரம்

Published On 2020-01-23 20:14 GMT   |   Update On 2020-01-23 20:14 GMT
நேதாஜி சுபா‌‌ஷ் சந்திரபோஸ் பிறந்த நாளை முன்னிட்டு டெல்லியில் பாராளுமன்ற கட்டிடத்தில் உள்ள அவரது உருவப்படத்திற்கு பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
புதுடெல்லி:

இந்திய தேசிய ராணுவத்தை நிறுவி, சுதந்திர போராட்டத்தில் முக்கிய பங்கு ஆற்றியவர் நேதாஜி சுபா‌‌ஷ் சந்திரபோஸ். இவரது பிறந்த நாள், நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.

இதையொட்டி டெல்லியில் பாராளுமன்ற கட்டிடத்தில் அவரது உருவப்படம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது.

பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா உடனிருந்தார்.

நேதாஜி சுபா‌‌ஷ் சந்திரபோஸ் குறித்து பிரதமர் மோடி டுவிட்டரில் பதிவு வெளியிட்டு புகழாரம் சூட்டினார். அதில் அவர், ‘‘காலணித்துவத்தை எதிர்ப்பதில் நேதாஜி சுபா‌‌ஷ் சந்திரபோஸின் துணிச்சலுக்கும், அழியாத பங்களிப்புக்கும் இந்தியா என்றும் நன்றியுடன் இருக்கும்’’ என குறிப்பிட்டுள்ளார்.
Tags:    

Similar News