செய்திகள்
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்

இந்து மகா சபையின் பிரித்தாளும் அரசியலை எதிர்த்தவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் - மம்தா பேச்சு

Published On 2020-01-23 13:59 GMT   |   Update On 2020-01-23 13:59 GMT
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இந்து மகா சபையின் பிரித்தாளும் அரசியலை எதிர்த்தார் என மேற்கு வங்காள முதல்மந்திரி மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா:

சுதந்திரப் போராட்ட வீரரும், இந்திய ரானுவத்தை உருவாக்கியவருமான ‘நேதாஜி’ சுபாஷ் சந்திரபோசின் 123வது பிறந்தநாள் நாடு முழுவதும் இன்று கொண்டாடப்பட்டுவருகிறது. இதையொட்டி அவருக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், மேற்கு வங்காள மாநிலம் டார்ஜ்லிங்கில் நேதாஜியின் பிறந்தநாள் விழா கொண்டங்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. 

அந்த சிறப்பு நிகழ்ச்சியில் அம்மாநில முதல்மந்திரி மம்தா பானர்ஜி கலந்துகொண்டார். 

இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் மம்தா பானர்ஜி பேசியதாவது:-

நேதாஜி இந்து மகாசபையின் பிரித்தாளும் அரசியலை எதிர்த்தார். மேலும், அவர் மதச்சார்பற்ற இந்தியாவை உருவாக்க போராடினார். 

ஆனால், தற்போது மதச்சார்பின்மை கொள்கையை பின்பற்றும் மக்களை வெளியேற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.



நேதாஜி மரணம் தொடர்பாக சில ஆவணங்களை மட்டுமே மத்திய அரசு வெளியிட்டுள்ளது. ஆனால், நேதாஜி மரணம் குறித்த உண்மையை கண்டறிய மத்திய அரசு எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. 

நேதாஜி மரணமடைந்து 70 ஆண்டுகளுக்கு மேலாகியும் அவருக்கு என்ன ஆனது என்பது குறித்த விவரங்கள் தெரியவில்லை. இது ஒரு வெட்கக்கெடான விஷயம்.

என அவர் தெரிவித்தார்.
Tags:    

Similar News