செய்திகள்
ஸ்மிருதி இரானி

அவ்வாறு செய்தால் ஆம் ஆத்மிக்கு வாக்கு அதிகரிக்கும் என பா.ஜ.க. மந்திரி கருத்து தெரிவித்தாரா?

Published On 2020-01-23 06:23 GMT   |   Update On 2020-01-23 06:23 GMT
டெல்லி சட்டசபை தேர்தலுக்கு வாக்குச்சாவடிகளை அங்கு அமைத்தால் ஆம் ஆத்மிக்கு வாக்கு அதிகரிக்கும் என பா.ஜ.க. மந்திரி கூறியதாக தகவல் வைரலாகியுள்ளது.



டெல்லி சட்டபைக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் பிரச்சாரங்கள் பற்றிய விவரங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வரிசையில், வரவிருக்கும் டெல்லி சட்டசபை தேர்தலுக்கு டெல்லி பள்ளிகளில் வாக்குச்சாவடி அமைத்தால், தேர்தல் முடிவுகள் அரவிந்த் கெஜ்ரிவால் அரசுக்கு சாதகமாக மாறிவிடும் என பா.ஜ.க. மந்திரி ஸ்மிருதி இரானி கூறியதாக சமூக வலைதளங்களில் தகவல் வைரலாகி வருகிறது.

இதே தகவல் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் தனியார் செய்தி நிறுவனத்தின் செய்தியாக பகிரப்படுகிறது. ஆய்வில் இந்த தகவல் முற்றிலும் பொய் என தெரியவந்துள்ளது. பா.ஜ.க. மந்திரி ஸ்மிருதி இரானி இதுபோன்ற கருத்தை தெரிவிக்கவில்லை என்றும், தனியார் செய்தி நிறுவனமும் அதுபற்றிய செய்தியை வெளியிடவில்லை எனவும் தெரியவந்துள்ளது.



வைரல் பதிவுகளில் உள்ள ட்விட்கள் போலி அக்கவுண்ட்களில் இருந்து பகிரப்பட்டுள்ளன. இந்த அக்கவுண்ட்கள் தற்சமயம் இடைநீக்கம் செய்யப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது. இந்த அக்கவுண்ட்கள் விதிகளை மீறியதால் நீக்கப்பட்டதாக தெரிகிறது. அந்த வகையில் ஸ்மிருதி இரானி கூறியதாக வைரலாகும் கருத்தை அவர் தெரிவிக்கவில்லை என்பது உறுதியாகிவிட்டது.

போலி செய்திகளை பரப்பாதீர்கள். வலைத்தளங்களில் வரும் தகவல்களின் உண்மைத்தன்மை தெரியாமல் அவற்றை பரப்ப வேண்டாம். சமயங்களில் போலி செய்திகளால் உயிரிழப்பு உள்பட பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன.
Tags:    

Similar News