செய்திகள்
காஷ்மீர் மக்கள்

ஜம்மு காஷ்மீருக்கு வளர்ச்சி நிதியாக ரூ.80,000 கோடி ஒதுக்கீடு

Published On 2020-01-22 15:45 GMT   |   Update On 2020-01-23 02:11 GMT
சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு உள்ள நிலையில், ஜம்மு காஷ்மீருக்கு 80 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசு வளர்ச்சி நிதியாக ஒதுக்கீடு செய்துள்ளது.
புதுடெல்லி:

காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி நீக்கியது.

சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதை அடுத்து சட்டம்-ஒழுங்கை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜம்மு காஷ்மீரில் தகவல் தொடர்புகள் முடக்கப்பட்டது. பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வீட்டு சிறைகளில் வைக்கப்பட்டனர்.

இதற்கிடையே, ஜம்மு காஷ்மீரில் நிலைமை தற்போது சகஜநிலை திரும்பியுள்ளது. முடக்கப்பட்ட தகவல் தொடர்புகள் நீக்கப்பட்டு அவை செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கு வளர்ச்சி நிதியாக 80 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் இன்று ஒதுக்கீடு செய்துள்ளது.
Tags:    

Similar News