செய்திகள்
ராகுல் காந்தி

சிஏஏ எதிர்ப்பு பேரணியில் பங்கேற்க ஜனவரி 30ல் ராகுல் காந்தி வயநாடு பயணம்

Published On 2020-01-22 13:04 GMT   |   Update On 2020-01-22 13:04 GMT
திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பேரணியில் கலந்து கொள்ள காங். கட்சியின் முன்னாள் தலைவரும், தொகுதி எம்.பி.யுமான ராகுல் காந்தி ஜனவரி 30ல் வயநாடு செல்கிறார்.
திருவனந்தபுரம்:

மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு (சி.ஏ.ஏ.) எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்த சட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. 

இதேபோல, தேசிய குடிமக்கள் பதிவேடு (என்.ஆர்.சி.), தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்.பி.ஆர்) ஆகியவற்றுக்கும் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றன.

கேரளா, மேற்கு வங்காளம் மற்றும் காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் என 11 மாநிலங்கள் குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேட்டை அமல்படுத்த மாட்டோம் என அறிவித்துள்ளன.

கேரளா மற்றும் பஞ்சாப் சட்டசபையில் சி.ஏ.ஏ.வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், கேரள அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கும் தொடர்ந்துள்ளது.

இந்நிலையில், திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பேரணியில் கலந்து கொள்ள காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், தொகுதி எம்.பி.யுமான ராகுல் காந்தி ஜனவரி 30-ம் தேதி வயநாடு தொகுதிக்கு செல்கிறார் என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Tags:    

Similar News