செய்திகள்
நித்தியானந்தா

நித்தியானந்தாவுக்கு இண்டர்போல் புளூ கார்னர் நோட்டீஸ்

Published On 2020-01-22 12:22 GMT   |   Update On 2020-01-22 12:22 GMT
இந்தியாவில் இருந்து தப்பிச்சென்று 'கைலாசா' என்ற பெயரில் புதிய நாட்டை உருவாக்கியுள்ள சாமியார் நித்தியானந்தாவுக்கு எதிராக இண்டர்போல் 'புளூ கார்னர்’ நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.
புதுடெல்லி:

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள ஆசிரமத்தில் இருந்த 2 பெண் சீடர்கள் மாயமானது தொடர்பாக சாமியார் நித்தியானந்தா மீது அம்மாநில போலீசில் வழக்குப்பதிவு செய்தனர். 

மேலும், குழந்தைகளை கடத்திச்சென்று அவர்களை கட்டாயப்படுத்தி ஆசிரமத்திற்கு நன்கொடை வசூல் செய்யும் வேலையில் ஈடுபடுத்தியதாகவும் அவர்மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 

இதையடுத்து, சாமியார் நித்தியானந்தாவை குஜராத் போலீசார் தீவிரமாக தேடிவந்தனர். ஆனால் அவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்தியாவை விட்டு தப்பிச்சென்று ஈக்குவடார் நாட்டிற்கு அருகே தீவு ஒன்றை விலைக்கு வாங்கி ‘கைலாசா’ என்ற பெயரில் புதிதாக நாடு ஒன்றை உருவாக்கி உல்லாசமாக வாழ்ந்து வருகிறார். 

இதற்கிடையில், வெளிநாட்டில் உள்ள நித்தியானந்தாவை கைது செய்ய தேவையான நடைமுறைகளை மேற்கொள்ளும்படி சிபிஐக்கு குஜராத் போலீசார் வேண்டுகோள் விடுத்தனர். 

இதையடுத்து, 'இண்டர்போல்’ எனப்படும் சர்வதேச போலீஸ் அமைப்பின் உதவியை சிபிஐ நாடியது.



இந்நிலையில், நித்தியானந்தாவுக்கு எதிராக ‘இண்டர்போல்’ போலீஸ் அமைப்பு 'புளூ கார்னர்’ நோட்டீஸ் (நில நிற நோட்டீஸ்) பிறப்பித்துள்ளது. 

இந்த நோட்டீஸ் மூலம் சாமியார் நித்தியானந்தா இருக்கும் இடம், அவரது நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு பல்வேறு விவரங்களை சேகரிக்கும்படி 'இண்டர்போல்’ தனது அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த 'புளூ கார்னர்’ நோட்டீசுக்கு பின்னரும் நித்தியானந்தா குறித்த விவரங்கள் கிடைக்காத பட்சத்தில் 'ரெட் கார்னர்’ நோட்டீஸ் பிறப்பிக்கப்படும். 

அதன்மூலம் சாமியார் நித்தியானந்தாவுக்கு சர்வதேச அளவிலான கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டு அவர் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 
Tags:    

Similar News