செய்திகள்
திருப்பதி அலிபிரி நடைபாதை

திருப்பதி அலிபிரி நடைபாதையில் கண்காணிப்பு கேமரா

Published On 2020-01-22 05:05 GMT   |   Update On 2020-01-22 05:05 GMT
திருப்பதி அலிபிரி நடைபாதையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் என்றும் தேவஸ்தான அனைத்துக் கோவில்களிலும் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்படும் என்றும் முதன்மை செயல் அலுவலர் கூறினார்.
திருமலை:

திருப்பதியில் உள்ள தேவஸ்தான அலுவலக பவனில் மூத்த அதிகாரிகள் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் முதன்மை செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால் கூறியதாவது:-

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி எந்தவொரு அசம்பாவித சம்பவமும் நடக்காமல் பக்தர்களுக்கு அமைதியாக சேவை செய்த அனைத்து அதிகாரிகள், ஊழியர்கள், அர்ச்சகர்கள், ஸ்ரீவாரிசேவா சங்க தொண்டர்கள், சாரண-சாரணியர் போலீசார் ஆகியோருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

திருமலையில் உள்ள அன்னதானக்கூடம், திருப்பதியில் உள்ள சீனிவாசம், விஷ்ணு நிவாசம், மாதவம் ஆகிய தங்கும் விடுதிகளை தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.

பக்தர்கள் தங்களின் கிரெடிட், டெபிட் கார்டுகள் மூலம் விடுதிகளில் அறையை முன்பதிவு செய்து கொள்ளலாம். அந்தக் கார்டுகள் மூலம் தங்க டாலர்களும் விற்பனை செய்யப்படும்.

பக்தர்கள் மரக்கன்றுகளை காணிக்கையாக வழங்கலாம். அதை பூங்காக்களில் நடவு செய்யப்படும். பூந்தி தயாரிக்கும் கூடத்தில் தீயணைப்பான் கருவிகள் கூடுதலாக வைக்கப்படும். திருமலையில் உள்ள தேவஸ்தான அருங்காட்சியகத்தில் உள்ள பொருட்களை திரையில் பார்க்க மினி தியேட்டர் அமைக்கப்படும்.

அலிபிரி நடைபாதை கான்கிரீட் மேற்கூரை புதிதாக கட்டப்பட உள்ளது. அந்தப் பணி விரைவில் தொடங்க உள்ளது. அலிபிரி நடைபாதையில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்படும். அதே போல் தேவஸ்தான அனைத்துக் கோவில்களிலும் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News