செய்திகள்
கோப்பு படம்

இந்தியாவில் காற்று மாசுபாடு அதிகமாக உள்ள நகரங்களின் பட்டியல் வெளியிடு - சென்னைக்கு எந்த இடம் தெரியுமா?

Published On 2020-01-21 14:03 GMT   |   Update On 2020-01-21 14:24 GMT
இந்தியாவில் காற்று மாசுபாடு அதிகமாக உள்ள நகரங்களின் பட்டியலை கிரின் பீஸ் இந்தியா என்ற அமைப்பு வெளியிட்டுள்ளது.
புதுடெல்லி:

இந்தியாவின் பல்வேறு நகரங்களில் காற்றின் தரம் மனிதர்கள் சுவாசிக்க தகுதியற்ற அளவிற்கு மிகவும் மாசடைந்துவருகிறது. தொழிற்சாலைகளில் இருந்து வெளியாகும் புகை, வாகனப்புகை என பல்வேறு காரணங்களால் காற்று மாசுபாடு அதிகரித்துவருகிறது. 

இந்நிலையில், 'கிரின் பீஸ் இந்தியா’ என்ற நிறுவனம் நாட்டில் காற்று மாசுபாடு அதிகமாக உள்ள நகரங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் உள்ள 287 நகரங்களில் நடத்தப்பட்ட ஆய்வுகளை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. 

அதன்படி,  உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஜாக்ரியா நகரம் இந்தியாவில் காற்று அதிகம் மாசடைந்துள்ள நகரங்களின் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. 

நிலக்கரி சுரங்கங்கள் மற்றும் அது சார்ந்த தொழிற்சாலைகள் அதிகம் உள்ள அந்நகரில் காற்று மனிதர்கள் சுவாசிக்க தகுதியற்ற நிலையில் உள்ளது.

காற்று மாசுபாடு அதிகமாக உள்ள நகரங்களின் பட்டியல் பின்வருமாறு:-

1) ஜாக்ரியா - உத்தரகாண்ட்
2) தன்பட் - உத்தரகாண்ட்
3) நொய்டா - உத்தர பிரதேசம்
4) காசியாபாத் - உத்தர பிரதேசம்
5) அகமதாபாத் - குஜராத்
6) பெரிலி - உத்தர பிரதேசம்
7) அலகாபாத் - உத்தர பிரதேசம்
8) மொராதாபாத் - உத்தர பிரதேசம்
9) ஃபெரோஷாபாத் - உத்தர பிரதேசம்
10) டெல்லி - புது டெல்லி

இந்தியாவில் அதிகம் காற்று மாசுபாடு அடைந்த முதல் 10 நகரங்களில் 6 நகரங்கள் உத்தர பிரதேசம் மாநிலத்தில் உள்ளது. அதேபோல் தமிழ்நாட்டில் அதிக காற்று மாசுபாடு அடைந்துள்ள நகங்களில் திருச்சி முதலிடம் பிடித்துள்ளது.

தமிழ்நாட்டில் காற்று அதிகம் மாசடைந்துள்ள நகரங்களின் பட்டியல் பின்வருமாறு:-



94) திருச்சி - தமிழ்நாடு
121) தூத்துக்குடி - தமிழ்நாடு
166) மதுரை - தமிழ்நாடு
179) சென்னை - தமிழ்நாடு
238) சேலம் - தமிழ்நாடு
249) கோயம்புத்தூர் - தமிழ்நாடு
252) கடலூர் - தமிழ்நாடு
254) மேட்டூர் - தமிழ்நாடு

இந்த பட்டியலில் கடைசி இடமான 287-வது இடத்தை பெற்று மிசோரம் மாநிலத்தில் உள்ள லுங்கிலி என்ற நகரம் இந்தியாவிலேயே காற்று மாசுபாடு மிகவும் குறைவான நகரம் என்ற சிறப்பை பெற்றுள்ளது.
Tags:    

Similar News