செய்திகள்
ராம்விலாஸ் பஸ்வான்

3 கோடி போலி ரேசன் கார்டுகள் கண்டுபிடிப்பு- ராம்விலாஸ் பஸ்வான் தகவல்

Published On 2020-01-21 02:47 GMT   |   Update On 2020-01-21 02:47 GMT
ரேசன் கார்டுகளுடன் ஆதார் எண் இணைப்பு நடவடிக்கையால் நாட்டில் 3 கோடி போலி ரேசன் கார்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மத்திய உணவுத்துறை மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் கூறினார்.
பாட்னா:

மத்திய உணவுத்துறை மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் நிருபர்களிடம் கூறியதாவது:-

ரேசன் கார்டுகளுடன் ஆதார் எண் இணைப்பு நடவடிக்கையால் நாட்டில் 3 கோடி போலி ரேசன் கார்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வருகிற ஜூன் மாதத்துக்குள் நாடு முழுவதும் ‘ஒரே நாடு, ஒரே ரேசன் கார்டு’ திட்டம் நிறைவேற்றப்படும். இதுவரை ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா உள்பட 16 மாநிலங்களில் 3 கட்டங்களாக இத்திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் உள்ள தொலைதூர இடங்களில் இந்த திட்டத்தை நிறைவேற்றுவதில் சில தடங்கல்கள் உள்ளது.



இந்த திட்டத்தில் 81 கோடி பயனாளிகள் உள்ளனர். தற்போது 610 லட்சம் டன் உணவு தானியங்கள் ரேசனில் வழங்கப்படுகிறது. மத்திய அரசு மானியமாக ஒரு லட்சத்து 78 ஆயிரம் கோடி ரூபாய் வழங்குகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News