செய்திகள்
ராபர்ட் வதேரா

லண்டன் சொத்து வழக்கில் ராபர்ட் வதேராவின் நண்பர் கைது

Published On 2020-01-20 22:37 GMT   |   Update On 2020-01-20 22:37 GMT
லண்டன் சொத்து வழக்கு தொடர்பாக, வெளிநாட்டு இந்திய தொழிலதிபரும், ராபர்ட் வதேராவின் நண்பருமான சி.சி.தம்பி என்பவரை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்
புதுடெல்லி:

லண்டனில் முறைகேடாக சொத்துகள் வாங்கியதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா, தலைமறைவான ஆயுத வியாபாரி சஞ்சய் பண்டாரி ஆகியோர் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக, வெளிநாட்டு இந்திய தொழிலதிபரும், ராபர்ட் வதேராவின் நண்பருமான சி.சி.தம்பி என்பவரை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். சட்டவிரோத பண பரிமாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டார்.

சஞ்சய் பண்டாரி நிறுவனம் விற்ற லண்டன் வீட்டை சி.சி.தம்பியின் நிறுவனம் வாங்கியதாகவும், பிறகு அந்த வீட்டை ராபர்ட் வதேரா வாங்கியதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. சோனியா காந்தியின் உதவியாளர் மூலமாக தம்பிக்கு ராபர்ட் வதேராவின் அறிமுகம் கிடைத்ததாகவும் கூறியுள்ளது. இதை வதேரா மறுத்துள்ளார். தம்பி கைது மூலம் இவ்வழக்கின் மர்மங்கள் அகலும் என்று அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
Tags:    

Similar News