செய்திகள்
திருத்தப்பட்ட குடியுரிமை சட்டம்

சிஏஏ-வை அமல்படுத்துமாறு மாநில அரசுகளை வற்புறுத்த முடியாது: காங்கிரஸ்

Published On 2020-01-19 14:26 GMT   |   Update On 2020-01-19 14:26 GMT
திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தை உச்சநீதிமன்றத்தில் முடிவு கிடைக்கும் வரை மத்திய அரசு அமல்படுத்துமாறு மாநில அரசுகளை வற்புறுத்த முடியாது என காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது. ஆனால், எங்கள் முடிவில் எந்த மாற்றமும் இல்லை, ஒரு அடி கூட அதில் இருந்து பின் வாங்கமாட்டோம் என்று அமித் ஷா தெரிவித்துள்ளார்.

மேலும், மாநில அரசுகள் இதை நடைமுறை படுத்த வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. ஆனால் கேரள அரசு இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சி இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளது. மத்திய அரசின் முடிவு குறித்து காங்கிரஸ் சார்பில் கூறும்போது ‘‘திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு எதிராக மக்கள் பயமில்லாமல் போராடி வருகிறார்கள். பொதுமக்கள், கட்சிகள், மாநிலங்கள் தொடர்ந்து இந்த சட்டத்திற்கு எதிராக போராடும்.

அரசியலமைப்பு கூட்டாட்சிக்கு எதிராக திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தை அமல்படுத்துமாறு உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் மாநில கவர்னர்கள் தொடர்ச்சியாக அறிக்கை விடுத்து வருகிறார்கள்.

உச்சநீதிமன்றத்தில் பிரிவு 131-ன்கீழ் மனுக்கள் தொடரப்பட்ட பிறகு, மனு மீதான தீர்ப்பு வரும்வரை, திருத்தப்பட்ட குடியுரிமை சட்டம் போன்ற சட்டத்திற்கு விரோதமான சட்டங்களை அமல்படுத்துமாறு மாநில அரசுகளை வற்புறுத்த முடியாது’’ என்று கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News