செய்திகள்
உச்ச நீதிமன்றம்

நிர்பயா வழக்கு குற்றவாளி மேல் முறையீடு மனு - உச்ச நீதிமன்றத்தில் நாளை மறுதினம் விசாரணை

Published On 2020-01-18 11:06 GMT   |   Update On 2020-01-18 11:06 GMT
நிர்பயா வழக்கு குற்றவாளி பவன் குமாரின் மனுவை தள்ளுபடி செய்த உத்தரவுக்கு எதிரான மேல்முறையீடு மனுவை உச்ச நீதிமன்றம் நாளை மறுநாள் விசாரிக்கிறது.
புதுடெல்லி:

நிர்பயா வழக்கில் தண்டனை பெற்ற 4 குற்றவாளிகளையும் பிப்ரவரி 1-ம் தேதி தூக்கிலிடும்படி டெல்லி நீதிமன்றம் புதிய வாரண்ட் பிறப்பித்துள்ளது.

இதற்கிடையே, 4 குற்றவாளிகளில் ஒருவரான பவன்குமார் குப்தா, தூக்குத் தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரியும், டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராகவும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளார். 

அந்த மனுவில், சம்பவம் நடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் தான் சிறுவன் என்றும், அதனால் தனக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை நிறுத்திவைக்க வேண்டும். தனது வழக்கறிஞர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மோசடியான ஆவணங்களை தாக்கல் செய்ததுடன், தனக்கு ஆதரவாக வாதாடவில்லை என குற்றம்சாட்டியுள்ளார்.

இந்நிலையில், குற்றவாளி பவன் குமாரின் மனுவை தள்ளுபடி செய்த உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை நாளை மறுநாள் உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடத்த உள்ளது.
Tags:    

Similar News