செய்திகள்
நிர்பயா தந்தை

சோனியா போல் பரந்த மனது எங்களுக்கு இல்லை - வக்கீல் மீது நிர்பயா தந்தை பாய்ச்சல்

Published On 2020-01-18 10:50 GMT   |   Update On 2020-01-18 10:50 GMT
குற்றவாளிகளை மன்னிக்க கோரிய வக்கீல் ஜெய்சிங், தனது கருத்துக்கு நிர்பயா தாயாரிடம் மன்னிப்பு கோர வேண்டும் என நிர்பயா தந்தை தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா கற்பழித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

இதுதொடர்பான வழக்கை விசாரித்த டெல்லி ஐகோர்ட், நிர்பயா வழக்கு குற்றவாளிகள் 4 பேரையும் பிப்ரவரி மாதம் 1-ம் தேதி காலை 6 மணிக்கு தூக்கிலிட வேண்டும் என  உத்தரவிட்டது. ஆனால், நிர்பயா வழக்கில் தண்டனை பெற்ற குற்றவாளிகளில் ஒருவர் நேற்று உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.

இதற்கிடையே, ராஜீவ் காந்தி கொலை குற்றவாளியான நளினி உள்ளிட்டோரை சோனியா காந்தி மன்னித்ததுபோல், நீங்களும் மன்னித்து விடலாமே என மூத்த வக்கீல் இந்திரா ஜெய்சிங் டுவிட்டரில் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில், குற்றவாளிகளை மன்னிக்க கோரிய வக்கீல் ஜெய்சிங், தனது கருத்துக்கு நிர்பயா தாயாரிடம் மன்னிப்பு கோர வேண்டும் என நிர்பயா தந்தை ஆவேசமாக பதிலளித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், சோனியா காந்தியை போல் பரந்த மனது எங்களுக்கு இல்லை. வக்கீல் ஜெய்சிங் தனது கருத்துக்கு வெட்கப்பட வேண்டும். இதற்காக அவர் நிர்பயா தாயாரிடம் மன்னிப்பு கோர வேண்டும் என தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News