செய்திகள்
டெல்லி பாட்டியாலா கோர்ட்

நிர்பயா வழக்கு குற்றவாளிகளை பிப்ரவரி 1-ம் தேதி தூக்கிலிட கோர்ட் உத்தரவு

Published On 2020-01-17 11:49 GMT   |   Update On 2020-01-17 11:49 GMT
நிர்பயா வழக்கு குற்றவாளிகள் 4 பேரையும் பிப்ரவரி மாதம் 1-ம் தேதி காலை 6 மணிக்கு தூக்கிலிட வேண்டும் என டெல்லி பாட்டியாலா கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி:

டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா கற்பழித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் 4 பேரையும் வரும் 22-ம் தேதி தூக்கில் போடுவதற்கு டெல்லி விசாரணை கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. அதன்படி திகார் சிறையில் தூக்கிலிடுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

தனது தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி 4 குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் சிங் கருணை மனு அனுப்பினார். இந்த கருணை மனுவானது டெல்லி அரசு மற்றும் டெல்லி துணை நிலை ஆளுநரால் நிராகரிக்கப்பட்டது. பின்னர் உள்துறை அமைச்சகமும் கருணை மனுவை நிராகரித்து, ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்தது. அதில், முகேஷ் சிங்கின் கருணை மனுவை நிராகரிக்கும்படி ஜனாதிபதிக்கு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. 

உள்துறை அமைச்சகத்தின் இந்த கோரிக்கையை ஏற்ற ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், கருணை மனுவை நிராகரித்து உத்தரவிட்டுள்ளார். இதன்மூலம் முகேஷ் சிங்கை தூக்கிலிடுவதற்கான தடை நீங்கி உள்ளது. 

இந்நிலையில், முகேஷ் சிங் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை டெல்லி பாட்டியாலா கோர்ட்டில் இன்று மதியம் நடைபெற்றது. மனுவை விசாரித்த நீதிமன்றம், நிர்பயா வழக்கு குற்றவாளிகள் 4 பேரையும் பிப்ரவரி மாதம் 1-ம் தேதி காலை 6 மணிக்கு தூக்கிலிட வேண்டும் என  உத்தரவிட்டுள்ளது.
Tags:    

Similar News