செய்திகள்
உச்ச நீதிமன்றம்

தேசிய மக்கள் தொகை பதிவேடு- மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

Published On 2020-01-17 09:08 GMT   |   Update On 2020-01-17 09:08 GMT
தேசிய மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களுக்கு பதிலளிக்கும்படி மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
புதுடெல்லி:

மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டம், தேசிய மக்கள் தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றைக் கண்டித்து நாடு முழுவதும் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெறுகின்றன. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு தனிநபர்கள், அமைப்புகள் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்நிலையில், தேசிய மக்கள் தொகை பதிவேடு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள், உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. அப்போது மனுதாரர்களின் மனுவிற்கு பதில் மனு தாக்கல் செய்யும்படி மத்திய அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

இதேபோல் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான வழக்குகளிலும், அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியிருப்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News