செய்திகள்
வைரல் புகைப்படம்

வைரல் புகைப்படத்துடன் வலம் வரும் பகீர் காரணம் உண்மையா?

Published On 2020-01-17 06:11 GMT   |   Update On 2020-01-17 06:11 GMT
சமூக வலைதளத்தில் வலம் வரும் புகைப்படம் தவறான தலைப்பில் வைரலாகி வருகிறது. இதன் உண்மை காரணத்தை தொடர்ந்து பார்ப்போம்.



அலுவலகம் ஒன்றில் ஊழியர் ஒருவர் அமர்ந்து கொண்டே உறங்குகிறார். அவரை சுற்றி மற்ற ஊழியர்கள் ஒன்று கூடி நின்று செல்ஃபி எடுத்துள்ளனர். இந்த செல்ஃபி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. வைரல் பதிவுகளில் செல்ஃபி எடுக்கும் போது அமர்ந்து இருப்பவர், திடீர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்து விட்டதாக கூறப்பட்டுள்ளது.

ஃபேஸ்புக் பக்கத்தில், "வீட்டில் இதை முயற்சிக்க வேண்டாம், இதை நாமும் செய்ய வேண்டும், புகைப்படத்தில் உள்ள மனிதர் இறந்து விட்டார், அவருடன் பணியாற்றியவர்கள் அவர் உறங்குவதாக நினைத்து அவருடன் செல்ஃபி எடுத்துக் கொள்கின்றனர்" எனும் தலைப்பில் இந்த புகைப்படம் பகிரப்படுகிறது.

புகைப்படத்தை ஆய்வு செய்ததில், புகைப்படத்துடன் பரவும் தகவலில் உண்மையில்லை என தெரியவந்துள்ளது. உண்மையில் நாற்காலியில் அமர்ந்து இருக்கும் நபர் மாரடைப்பு காரணமாக உயிரிழக்கவில்லை. மேலும் அவர் அலுவல் நேரத்தில் அசதி காரணமாக உறங்கியிருக்கிறார்.



இதுபற்றிய பல்வேறு செய்தி தொகுப்புகள் இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. அலுவல் நேரத்தில் உறங்கிய நபர், மீம் கிரியேட்டர்களால் பிரபலமாகி இருக்கிறார் என்ற வாக்கில் பல்வேறு தகவல்கள் இணையத்தில் இடம்பெற்றிருக்கின்றன.

2016-ம் ஆண்டு வெளியான தகவல்களில், எட்வார்டு பரஷிவேஸ்கு என்பவர், ஜிசாஃப்ட் எனும் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்த இரண்டாவது நாளில் உறங்கிவிட்டார். அவருடன் பணியாற்றிவயர்கள் செல்ஃபி எடுத்து, அதனை ரெடிட் தளத்தில் பதிவேற்றம் செய்தனர். பின் இந்த புகைப்படம் பல்வேறு மீம்களாக மாற்றப்பட்டன. 

அந்த வகையில் வைரல் புகைப்படத்தில் இருப்பவர் மரணிக்கவில்லை என்பது உறுதியாகிவிட்டது. 

போலி செய்திகளை பரப்பாதீர்கள். வலைத்தளங்களில் வரும் தகவல்களின் உண்மைத்தன்மை தெரியாமல் அவற்றை பரப்ப வேண்டாம். சமயங்களில் போலி செய்திகளால் உயிரிழப்பு உள்பட பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன.
Tags:    

Similar News