செய்திகள்
கேரள கவர்னர் ஆரிப் முகமது கான்

நான் ‘ரப்பர் ஸ்டாம்ப்’ அல்ல - கேரள கவர்னர் ஆவேசம்

Published On 2020-01-17 04:42 GMT   |   Update On 2020-01-17 04:42 GMT
கேரளாவில் வார்டுகள் எண்ணிக்கையை உயர்த்துவதற்கான அவசர சட்டம் குறித்து கருத்து தெரிவித்த ஆளுநர், ‘நான் ஒன்றும் ரப்பர் ஸ்டாம்ப் அல்ல’ என்று ஆவேசமாக தெரிவித்தார்.
திருவனந்தபுரம்:

கேரளாவில் பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. அங்கு உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான வார்டு மறுவரையறை பணிகள் நடந்து வருகின்றன. இதில், 2011-ம் ஆண்டு மக்கள்தொகை அடிப்படையில், வார்டுகள் எண்ணிக்கையை உயர்த்துவதற்கான அவசர சட்டத்துக்கு கேரள மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளது. பின்னர், கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில், கவர்னர் ஆரிப் முகமது கான் நேற்று அவசர சட்டம் குறித்து ஆவேசமாக கருத்து தெரிவித்தார். அவர் கூறியதாவது:-



நான் அவசர சட்டத்தில் கையெழுத்திட மாட்டேன் என்று கூறவில்லை. அதில், சில விஷயங்கள் குறித்து விளக்கம் கேட்டுள்ளேன். அதற்கு இன்னும் பதில் வரவில்லை. பதில் வந்த பிறகு அதை விரிவாக ஆய்வு செய்வதற்கு போதிய நேரம் தேவைப்படுகிறது. நான் ஒன்றும் ‘ரப்பர் ஸ்டாம்ப்’ அல்ல. இதுபோன்ற விவகாரங்களில் நன்றாக மனதை செலுத்திய பிறகே முடிவெடுப்பேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

எதிர்க்கட்சிகளும் அவசர சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

Tags:    

Similar News