செய்திகள்
நிலநடுக்கம்

லடாக்கில் நிலநடுக்கம்

Published On 2020-01-12 11:09 GMT   |   Update On 2020-01-12 11:09 GMT
லடாக்கில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவாகி இருந்தது.

ஐம்மு:

லடாக் யூனியன் பிரதேசத்தில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 10.54 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவாகி இருந்தது.

சில நிமிடங்கள் உணரப்பட்ட நில நடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. இதனால் பீதியடைந்த பொது மக்கள் வீடுகளை விட்டு வெளியில் ஒடி வந்தனர். நில நடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து உடனடியாக தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.

Tags:    

Similar News