செய்திகள்
சோனியா காந்தி

திருத்தப்பட்ட குடியுரிமை சட்டம் மக்களிடையே பிளவை ஏற்படுத்தும் - சோனியா காந்தி

Published On 2020-01-11 14:24 GMT   |   Update On 2020-01-11 14:24 GMT
டெல்லியில் நடந்த காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, சி.ஏ.ஏ. மக்களிடையே பிளவு ஏற்படுத்தும் பாரபட்சமான சட்டம் என தெரிவித்தார்.
புதுடெல்லி:

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு (சிஏஏ) எதிராக நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றன. இச்சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி வருகின்றனர். 

ஆனால், குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரித்து பா.ஜ.க. சார்பில் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  இதுபோல், மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய மக்கள் தொகை பதிவேட்டையும் பல்வேறு கட்சிகள் எதிர்க்கின்றன.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் அக்பர் சாலையில் உள்ள கட்சி அலுவலகத்தில் சோனியா காந்தி தலைமையில் இன்று நடைபெற்றது. அந்த கூட்டத்தில் சோனியா காந்தி பேசியதாவது:

திருத்தப்பட்ட குடியுரிமை சட்டம் என்பது மக்களிடையே பிளவை ஏற்படுத்தும் பாரபட்சமான சட்டம். இது இந்திய மக்களை மத அடிப்படையில் பிரிப்பதாகும். சமத்துவம், நீதி, கண்ணியத்துக்கான மக்களின் போராட்டத்திற்கு காங்கிரஸ் தோள் கொடுக்கும் என குறிப்பிட்டுள்ளார்.
Tags:    

Similar News