செய்திகள்
மத்திய அரசு

நாடு முழுவதும் குடியுரிமை சட்டத்தை அமல்படுத்தியதாக மத்திய அரசு அறிவிப்பு

Published On 2020-01-10 17:32 GMT   |   Update On 2020-01-10 17:57 GMT
இன்று முதல் நாடு முழுவதும் குடியுரிமை சட்டத் திருத்தம் அமல்படுத்தப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
புதுடெல்லி:

மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த போராட்டத்தின்போது பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்தது. குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பல்வேறு வழக்குகளும் தொடரப்பட்டுள்ளன.

இந்நிலையில், குடியுரிமை சட்டத்தை உடனே அமல்படுத்தும்படி மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்து தர்ம பரிசத் சார்பில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.

குடியுரிமை சட்டத்தை உடனே அனைத்து மாநிலங்களிலும் அமல்படுத்த உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டு இந்தது. 

இந்நிலையில், caa சட்டத்தை அமல்படுத்த குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெற்று அரசிதழில் வெளியிட்டது உள்துறை அமைச்சகம். குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இன்று நாடு முழுவதும் அமலானது.

சட்டத்தை அமல்படுத்துவதில் ஒரு அங்குலம் கூட பின்வாங்க மாட்டோம் என அமித் ஷா கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News