செய்திகள்
இந்திய வெளியுறவுத் துறை அமைச்சக செய்திதொடர்பாளர் ரவீஷ்குமார்

வளைகுடா பகுதியில் போர் பதற்றம் தணிய வேண்டும் - இந்தியா விருப்பம்

Published On 2020-01-09 22:38 GMT   |   Update On 2020-01-09 22:38 GMT
வளைகுடா பகுதியில் விரைவில் போர் பதற்றம் தணிய வேண்டும் என்பதையே இந்தியா விரும்புவதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சக செய்திதொடர்பாளர் ரவீஷ்குமார் தெரிவித்தார்.
புதுடெல்லி:

ஈரான் ராணுவ தளபதி காசிம் சுலைமானியை அமெரிக்க படைகள் ஏவுகணை மூலம் தாக்கி கொன்றதால் பதிலுக்கு ஈராக்கில் உள்ள அமெரிக்க படைத்தளங்கள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதனால் இருநாடுகள் இடையே பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சக செய்திதொடர்பாளர் ரவீஷ்குமார் கூறும்போது, “வளைகுடா பகுதியில் விரைவில் போர் பதற்றம் தணிய வேண்டும் என்பதையே இந்தியா விரும்புகிறது. அந்த பிராந்தியத்தின் முக்கிய நாடுகளுடன் இந்தியா தொடர்பில் உள்ளது. அந்த பகுதியில் உள்ள சூழ்நிலையை இந்தியா மிகவும் உண்ணிப்பாக கண்காணித்து வருகிறது” என்றார்.

முன்னதாக ஈரான், ‘போர் பதற்றத்தை தணிக்க இந்தியா எந்த அமைதி முயற்சி மேற்கொண்டாலும் வரவேற்போம்’ என்று கூறியிருந்தது.
Tags:    

Similar News