செய்திகள்
நிதின் கட்காரி

மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் தேர்தல் - நிதின் கட்காரி சொந்த ஊரில் பாஜக தோல்வி

Published On 2020-01-08 12:41 GMT   |   Update On 2020-01-08 12:41 GMT
மகாராஷ்டிராவின் நாக்பூரில் நடைபெற்ற மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் தேர்தலில் நிதின் கட்காரியின் சொந்த ஊரில் பாஜக தோல்வி அடைந்துள்ளது.
மும்பை:

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள தபேவாடா பகுதியில் மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் பதவிக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது.

இந்த தேர்தலில் பாஜக சார்பில் மாருதி சோம்குவார், காங்கிரஸ் சார்பில் மகேந்திர டோங்ரே ஆகியோர் போட்டியிட்டனர்.

தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. இதில், காங்கிரஸ் வேட்பாளர் 9,444 வாக்குகள் பெற்று வென்றார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் 5,501 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வி அடைந்தார்.

சாலை போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்காரியின் சொந்த ஊர் தபேவாடா என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News