செய்திகள்
ராகுல் காந்தி

தொழிற்சங்க போராட்டத்துக்கு ராகுல் காந்தி ஆதரவு

Published On 2020-01-08 11:58 GMT   |   Update On 2020-01-08 11:58 GMT
12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய தொழிற்சங்கங்கள் நாடு முழுவதும் நடத்தும் போராட்டத்துக்கு ராகுல் காந்தி ஆதரவு தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்துக்கு எதிர்க்கட்சிகளை சேர்ந்த தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. வங்கிகளை தனியார் மயமாக்க கூடாது உள்பட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.

மத்திய தொழிற்சங்கங்கள் நாடு முழுவதும் நடத்தும் இந்த போராட்டத்துக்கு ராகுல் காந்தி ஆதரவு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

25 கோடி தொழிலாளர்கள் நாடு முழுவதும் இன்று நடத்தும் போராட்டத்துக்கு தலை வணங்குகிறேன. அவர்களுக்கு எனது ஆதரவை தெரிவித்துக் கொள்கிறேன்.

மோடி அரசின் கொள்கைகள் மக்களுக்கு விரோதமானது. தொழிலாளர்களுக்கு எதிரானது. வேலையின்மையில் பேரழிவு ஏற்பட்டுள்ளது.

பொதுத்துறை நிறுவனங்களை பலவீனப்படுத்தி தனது பெரும் முதலாளித்துவ நண்பர்களுக்கு விற்பதை பிரதமர் மோடி நியாயப்படுத்துகிறார்.

இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.
Tags:    

Similar News