செய்திகள்
காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா

முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி, ஜெயிலில் இருந்து விடுதலை - பிரியங்கா வரவேற்பு

Published On 2020-01-07 20:01 GMT   |   Update On 2020-01-07 20:01 GMT
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராடிய முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி ஜெயிலில் இருந்து விடுதலை செய்யப்பட்டதற்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா வரவேற்பு தெரிவித்துள்ளார்.
லக்னோ:

உத்தரபிரதேசத்தில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராடிய காங்கிரஸ் பிரமுகர் சதாப் ஜாபர், கடந்த 19-ந் தேதி கைது செய்யப்பட்டார். முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி எஸ்.ஆர்.தாராபுரி 20-ந் தேதி கைது செய்யப்பட்டார். இருவரும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களை ஜாமீனில் விடுவிக்க கடந்த 4-ந் தேதி லக்னோ கோர்ட்டு உத்தரவிட்டது.



இருப்பினும், சில நடைமுறைகளை முடிக்க வேண்டி இருந்ததால், அவர்கள் அன்று விடுதலை செய்யப்படவில்லை. இந்நிலையில், 3 நாட்கள் தாமதமாக நேற்று ஜெயிலில் இருந்து விடுதலை ஆனார்கள். ஜெயில் வாசலில் அவர்களை காங்கிரசார் வரவேற்றனர்.

இதற்கிடையே, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் அவர்களது படங்களை வெளியிட்டு அவர்கள் விடுதலைக்கு வரவேற்பு தெரிவித்துள்ளார்.

அப்பாவிகளையும், அம்பேத்கர் கொள்கையை பின்பற்றுபவர்களையும் கைது செய்ததன் மூலம் பா.ஜனதா தனது உண்மையான சித்தாந்தத்தை காட்டுவதாக அவர் கூறியுள்ளார். பொய் எப்போதும் வெற்றி பெறாது என்றும் அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News