செய்திகள்
வைரல் வீடியோ ஸ்கிரீன்ஷாட்

போராட்டக்களத்தில் தாக்கப்பட்ட மாணவிகள் - வைரலாகும் வீடியோ

Published On 2020-01-07 06:40 GMT   |   Update On 2020-01-07 06:40 GMT
போராட்டக்களத்தில் போலீஸ் அதிகாரி ஒருவர் மாணவியை தாக்கும் காட்சிகள் நிறைந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.



டெல்லி போலீசார் போராட்டக்காரர்களை தாக்கும் காட்சிகள் அடங்கிய 2016-ம் ஆண்டு எடுக்கப்பட்ட வீடியோ குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் எடுக்கப்பட்டதாக வைரலாகியுள்ளது.

வைரலாகும் வீடியோ ஆய்வு மாணவர் ரோகித் வெமுலா தற்கொலைக்கு விசாரணை கோரி நடைபெற்ற போராட்டத்தின் போது எடுக்கப்பட்டதாகும். வைரல் வீடியோவிற்கும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை.

வைரல் வீடியோவினை அனைத்து இந்திய காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளர் தீரஜ் குர்கர் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். ட்விட்டரில், போலீசாருடன் இருப்பவர்கள் யார், பெண்களை கொடூரமாக தாக்கும் இவர்கள் யார்? மோடி அரசாங்கம் இப்படித்தான் பெண்களுக்கு மரியாதை கொடுக்குமா? என்ற தலைப்பில் பழைய வீடியோவினை தீரஜ் ட்வீட் செய்திருக்கிறார்.



இதே வீடியோ ஃபேஸ்புக்கிலும் வைரலாகி வருகிறது. ஃபேஸ்புக் பதிவுகளில் வைரல் வீடியோ லக்னோவில் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. வைரல் வீடியோவை ஆய்வு செய்ததில் இந்த வீடியோ டெல்லியில் எடுக்கப்பட்டது என தெரியவந்துள்ளது. இதே வீடியோ ஜனவரி 2016-ல் யூடியூபில் பதிவேற்றம் செய்யப்பட்டு இருக்கிறது.

உண்மையில் இந்த வீடியோ ஐதராபாத் பல்கலைக்கழகத்தின் ஆய்வு மாணவர் வெமுலா தற்கொலை செய்து கொண்டதற்கு விசாரணை கோரி நடத்தப்பட்ட போராட்டத்தில் எடுக்கப்பட்டதாகும். இந்த விவகாரம் தொடர்பாக நாடு முழுக்க போராட்டங்கள் நடைபெற்றன.

அந்த வகையில் வைரல் வீடியோவிற்கும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பது தெளிவாகிவிட்டது. போலி செய்திகளை பரப்பாதீர்கள். வலைத்தளங்களில் வரும் தகவல்களின் உண்மைத்தன்மை தெரியாமல் அவற்றை பரப்ப வேண்டாம். சமயங்களில் போலி செய்திகளால் உயிரிழப்பு உள்பட பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன.
Tags:    

Similar News