செய்திகள்
தேர்தல் ஆணையம்

டெல்லி சட்டமன்ற தேர்தல் தேதியை இன்று அறிவிக்கிறது தேர்தல் ஆணையம்

Published On 2020-01-06 08:00 GMT   |   Update On 2020-01-06 08:00 GMT
டெல்லி சட்டசபை தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் இன்று பிற்பகல் அறிவிக்க உள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது.
புதுடெல்லி:

70 சட்டசபை உறுப்பினர்களை கொண்ட டெல்லியில் தற்போது ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல் மந்திரியாக அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளார். டெல்லி சட்டசபையின் பதவிக்காலம் பிப்ரவரி மாதம் 22-ம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே, அதற்குள்ளாக தேர்தல் நடத்தி புதிய அரசை தேர்வு செய்ய வேண்டியது அவசியம்.

இந்நிலையில், டெல்லி சட்டசபை தேர்தல் தேதியை இன்று பிற்பகல் 3.30 மணிக்கு தேர்தல் ஆணையம் அறிவிக்க உள்ளது.

நாட்டின் தலைநகர் என்பதாலும், மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் என தொடர்ந்து பா.ஜ.க. ஆட்சியை பறிகொடுத்து வரும் நிலையில், டெல்லி சட்டசபை தேர்தல் நாடு முழுவதும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

டெல்லியில் ஆட்சியை தக்கவைக்க ஆம் ஆத்மியும், மீண்டும் ஆட்சியைக் கைப்பற்ற காங்கிரஸ், பா.ஜ.க. ஆகியவை வியூகங்கள் வகுத்து வருகின்றன.
Tags:    

Similar News