செய்திகள்
வைரல் வீடியோ ஸ்கிரீன்ஷாட்

ஒரே அடியில் கீழே சாய்ந்த நபர் - வைரல் வீடியோ அந்த போராட்டத்தில் எடுக்கப்பட்டதா?

Published On 2020-01-06 06:47 GMT   |   Update On 2020-01-06 06:47 GMT
சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ அந்த போராட்டத்தின் போது எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதன் உண்மை பின்னணியை பார்ப்போம்.



காவல்துறை அதிகாரி ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்டவரின் தலையில் ஓங்கி அடிக்கும் காட்சி நிறைந்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. போலீசார் அடித்ததும், அந்த நபர் உடனே கீழே விழுவதும், அருகில் சில போலீசார் ஓடும் காட்சிகளும் வீடியோவில் இடம்பெற்று இருக்கின்றன.

சமூக வலைதளங்களில் வைரலாகும் பதிவுகளில் இந்த வீடியோ உத்தர பிரதேச மாநிலத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்தின் போது எடுக்கப்பட்டது என கூறப்பட்டுள்ளது. 

வைரல் வீடியோவை ஆய்வு செய்ததில், வீடியோ பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் எடுக்கப்பட்டது என தெரிய வந்துள்ளது. மேலும் இந்த வீடியோ இரண்டு மாதங்களுக்கு முன் எடுக்கப்பட்டதும் உறுதியாகி இருக்கிறது. வைரல் வீடியோ குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் எடுக்கப்பட்டது என நம்பி பலர் இதனை பகிர்ந்து வருகின்றனர்.



பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பாகிஸ்தான் காவல்துறை போராட்டக்காரர்கள் மீது நடத்திய தாக்குதலின் போது இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் 2019, அக்டோபர் 22-ம் தேதி நடைபெற்று இருக்கிறது. இதுபற்றிய செய்திகளையும் பல்வேறு செய்தி நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன.

அந்த வகையில் வைரல் வீடியோவுக்கும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டங்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பது உறுதியாகி இருக்கிறது.

போலி செய்திகளை பரப்பாதீர்கள். வலைத்தளங்களில் வரும் தகவல்களின் உண்மைத்தன்மை தெரியாமல் அவற்றை பரப்ப வேண்டாம். சமயங்களில் போலி செய்திகளால் உயிரிழப்பு உள்பட பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன.

Tags:    

Similar News