செய்திகள்
பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி

ராஜஸ்தான் முதல்-மந்திரியை பதவிநீக்க வேண்டும் - மாயாவதி கோரிக்கை

Published On 2020-01-04 23:30 GMT   |   Update On 2020-01-04 23:30 GMT
அரசு ஆஸ்பத்திரியில் 100 குழந்தைகள் பலியானது தொடர்பாக ராஜஸ்தான் முதல்-மந்திரி பதவிநீக்க வேண்டும் என பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார்.
லக்னோ:

ராஜஸ்தான் மாநிலம் கோடாவில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் கடந்த மாதம் சுமார் 100 குழந்தைகள் இறந்துள்ளன. இதையொட்டி அந்த மாநில முதல்-மந்திரி அசோக் கெலாட்டுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி டுவிட்டர் மூலம், “இதுதொடர்பாக அசோக் கெலாட் பொறுப்பற்ற, இரக்கமற்ற வகையில் அரசியல் அறிக்கைகளை வெளியிடுகிறார். இது மிகவும் வெட்கக்கேடு. அவரை பதவிநீக்கம் செய்துவிட்டு, வேறு ஒருவரை முதல்-மந்திரியாக நியமிக்க வேண்டும். இல்லையென்றால் மேலும் பல பெண்கள் தங்கள் குழந்தைகளை இழந்துவிடுவார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், “பிரியங்கா காந்தி உத்தரபிரதேசத்தில் அரசியல் விளையாட்டை கைவிட்டு, ராஜஸ்தான் சென்று குழந்தைகளை இழந்த தாய்மார்களுக்கு ஆறுதல் கூற வேண்டும்” என்று கூறியுள்ளார்.
Tags:    

Similar News