செய்திகள்
மத்திய மந்திரி ராம்விலாஸ் பஸ்வான்

மத அடிப்படையில் யாருடைய குடியுரிமையும் பறிக்கப்படாது - ராம்விலாஸ் பஸ்வான் உறுதி

Published On 2020-01-04 22:01 GMT   |   Update On 2020-01-04 22:01 GMT
குடியுரிமை, அவர்களின் பிறப்புரிமை. அதை எந்த அரசும் பறிக்க முடியாது என மத்திய மந்திரியும், லோக் ஜனசக்தி தலைவருமான ராம்விலாஸ் பஸ்வான் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

மத்திய மந்திரியும், லோக் ஜனசக்தி தலைவருமான ராம்விலாஸ் பஸ்வான் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

குடியுரிமை திருத்த சட்டம் குறித்து குழப்பத்தை விளைவித்து வருகிறார்கள். பட்டியல் இனத்தவர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், உயர்சாதி மக்கள் என யாராக இருந்தாலும், அவர்கள் இந்நாட்டின் உண்மையான குடிமக்கள். குடியுரிமை, அவர்களின் பிறப்புரிமை. அதை எந்த அரசும் பறிக்க முடியாது. எனவே, தேவையின்றி கவலைப்பட வேண்டாம்.

தேசிய குடிமக்கள் பதிவேடு பற்றி இன்னும் விவாதிக்கப்படவில்லை. அதுவும் மதத்துடன் சம்பந்தப்பட்டது அல்ல. மத அடிப்படையில் யாருக்கும் குடியுரிமை மறுக்கப்படாது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News