செய்திகள்
வைரல் வீடியோ ஸ்கிரீன்ஷாட்

வைரல் வீடியோ உண்மை தான், ஆனால் இதற்கும் அந்த பிரச்சனை தான் காரணமா?

Published On 2020-01-03 06:18 GMT   |   Update On 2020-01-03 06:18 GMT
சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோவுக்கும் அந்த பிரச்சனை தான் காரணம் என கூறப்படுகிறது. இதன் உண்மை விவரங்களை பார்ப்போம்.



குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் காவல் துறையினர் போராட்டக்காரர்களை கொடூரமாக தாக்குகின்றனர் என்ற தலைப்பில் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இந்த வீடியோ அசாமில் எடுக்கப்பட்டதாக கூறி நெட்டிசன்கள் அதனை பகிர்ந்து வருகின்றனர்.

ஆய்வில் வைரலாகும் வீடியோ உண்மையில் வங்கதேசத்தின் டாக்கா பகுதியில் எடுக்கப்பட்டது என ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும் இந்த வீடியோ ஏழு ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்டதும் உறுதியாகி இருக்கிறது. 

எனினும் வைரல் வீடியோ "அசாமில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்தின் போது எடுக்கப்பட்டது. மக்கள் தங்களது வீடுகளில் இருந்து வெளியேற்றப்படுகின்றனர். ஊடகம் இவற்றை உங்களுக்கு காண்பிக்காது, அதனால் இந்த வீடியோவை பகிர்வது நமது கடமை" என்ற தலைப்பில் பகிரப்பட்டு வருகிறது.



வைரல் வீடியோவில் காவலர்கள் மக்களை கொடூரமாக தாக்குவதும், ஆங்காங்கே சிலரது உடல்கள் தரையில் இருப்பதும், பலர் பாதுகாப்பை தேட ஓடுவது போன்ற பரபரப்பான காட்சிகள் நிறைந்திருக்கின்றன. உண்மையில் இந்த வீடியோ மே 6, 2013-ல் நடைபெற்ற போராட்டத்தின் போது ஏற்பட்ட மோதலில் எடுக்கப்பட்டதாகும்.

அந்த வகையில் வைரல் வீடியோவிற்கும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கான எதிரான போராட்டத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பது உறுதியாகி விட்டது. 

போலி செய்திகளை பரப்பாதீர்கள். வலைத்தளங்களில் வரும் தகவல்களின் உண்மைத்தன்மை தெரியாமல் அவற்றை பரப்ப வேண்டாம். சமயங்களில் போலி செய்திகளால் உயிரிழப்பு உள்பட பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன.
Tags:    

Similar News