செய்திகள்
மும்பை சித்திவிநாயகர் கோவிலில் சிறப்பு வழிபாடு

ஆங்கிலப் புத்தாண்டு சிறக்க பிரார்த்தனை- வழிபாட்டு தலங்களில் குவிந்த மக்கள்

Published On 2020-01-01 03:50 GMT   |   Update On 2020-01-01 03:50 GMT
ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு கோவில்கள், தேவாலயங்கள் மற்றும் பல்வேறு வழிபாட்டுத் தலங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. ஆண்டு முழுவதும் மகிழ்ச்சி நீடிக்க வேண்டி மக்கள் பிரார்த்தனை செய்தனர்.
மும்பை:

ஆங்கிலப் புத்தாண்டு ‘2020’ஐ வரவேற்கும் விதமாக உலகம் முழுவதும் அனைத்து தரப்பு மக்களும் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர்.  நள்ளிரவு 12 மணிக்கு புத்ததாண்டு பிறந்ததும், வாணவேடிக்கைகள், இசை நிகழ்ச்சிகள், விருந்து நிகழ்ச்சிகள் என பல்வேறு விதங்களில் மக்கள் புத்தாண்டை வரவேற்றனர். நட்சத்திர ஓட்டல்கள், கடற்கரைகள் உள்ளிட்ட இடங்களில் புத்தாண்டு கொண்டங்கள் களைகட்டின. ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து மகிழ்ந்தனர்.

இதேபோல் புத்தாண்டு சிறப்பாக அமைய வேண்டி கோவில்கள், தேவாலயங்கள் மற்றும் பல்வேறு வழிபாட்டுத் தலங்களில் இன்று சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. இதனால் வழிபாட்டு தலங்களில் மக்கள் குவிந்தவண்ணம் உள்ளனர். 

புதிய வருடத்தின் முதல் நாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதன் மூலம், ஆண்டு முழுவதும் வெற்றிகரமாகவும், மகிழ்ச்சியாகவும் அமையும் என்ற நம்பிக்கை நிலவி வருகிறது. இதனால் ஆண்டு முழுவதும் மகிழ்ச்சி நீடிக்க வேண்டும் என இறைவனை வேண்டி மக்கள் பிரார்த்தனை செய்கின்றனர்.



வாரணாசியில் உள்ள கங்கை நதிக்கு இன்று காலை ஆரத்தி வழிபாடு நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியைக் காண ஏராளமானோர் திரண்டிருந்தனர். மும்பை சித்திவிநாயகர் கோவிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, விநாயகரை வழிபட்டு, புத்தாண்டு சிறக்க பிரார்த்தனை மேற்கொண்டனர்.

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் உள்ள பொற்கோவிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் மத்திய மந்திரி ஹர்சிம்ரத் கவுர் பாதல், ஷிரோமணி அகாலி தளம் தலைவர் சுக்பீர் சிங் பாதல் ஆகியோர் பங்கேற்றனர். 
Tags:    

Similar News