செய்திகள்
டிஜிபி தில்பாக் சிங்

பயங்கரவாதிகள் ஊடுருவல் எண்ணிக்கை இந்தாண்டு குறைந்துள்ளது - டிஜிபி

Published On 2019-12-31 13:45 GMT   |   Update On 2019-12-31 13:45 GMT
ஜம்மு காஷ்மீரில் ஊடுருவும் பயங்கரவாதிகளின் எண்ணிக்கை 2018-ம் ஆண்டை காட்டிலும் 2019-ல் குறைந்துள்ளது என டிஜிபி தில்பாக் சிங் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீர் போலீஸ் டிஜிபியாக பதவி வகித்து வரும் தில்பாக் சிங் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

இந்த ஆண்டில் 160 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டு உள்ளனர். மேலும் 102 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

எங்களிடம் உள்ள ஆவணங்களின்படி இந்த ஆண்டு 130 பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளனர். இது கடந்த ஆண்டை விட குறைவு. கடந்த ஆண்டு 143 பயங்கரவாதிகள் ஊடுருவினர்.

இதேபோல், பயங்கரவாத அமைப்புகளில் 2019ல் சேர்ந்துள்ள இளைஞர்களின் எண்ணிக்கை 139. இது 2018-ம் ஆண்டில் 218 ஆக இருந்தது.

பயங்கரவாத இயக்கத்தில் சேர்ந்து தீவிரமாக செயல்பட்ட பயங்கரவாதிகளின் எண்ணிக்கை 350-ல் இருந்து 250 ஆக குறைந்துள்ளது என தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News