செய்திகள்
நிர்மலா சீதாராமன்

அடுத்த ஆண்டு சர்வதேச முதலீட்டாளர் மாநாடு நடத்தப்படும் - நிர்மலா சீதாராமன்

Published On 2019-12-31 10:54 GMT   |   Update On 2019-12-31 10:54 GMT
தலைநகர் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், அடுத்த ஆண்டில் சர்வதேச முதலீட்டாளர் மாநாடு நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

உள் கட்டமைப்பு துறையில் ரூ.100 லட்சம் கோடி அளவுக்கு முதலீடு செய்ய ஏதுவாக குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழு 70 விதமான துறை நிபுணர்களுடன் கலந்தாலோசித்து சுமார் ரூ.102 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்களை அடையாளம் கண்டுள்ளது.

வரும் 2024-25-ம் ஆண்டில் 5 டிரில்லியன் டாலர் என்ற பொருளாதார இலக்கை இந்தியா எட்டிவிடும். அனைத்து சவால்களும் கண்டறியப்பட்டுவிட்டது, பயணிப்பதற்கான அனைத்து வழிகளும் தயாராக உள்ளது.

2020-ம் ஆண்டின் இரண்டாவது பாதியில் சர்வதேச முதலீட்டாளர் மாநாடு நடத்தப்படும் என தெரிவித்தார்.
Tags:    

Similar News