செய்திகள்
துணை முதல்வராக பதவியேற்ற அஜித் பவார்

மகாராஷ்டிரா துணை முதல்வராக அஜித் பவார் பதவியேற்றார்- ஆதித்ய தாக்கரே கேபினட் மந்திரி ஆனார்

Published On 2019-12-30 08:27 GMT   |   Update On 2019-12-30 10:14 GMT
மகாராஷ்டிர அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்பட்டு, அஜித் பவார் துணை முதல்வராக பதவியேற்றார். ஆதித்ய தாக்கரே கேபினட் மந்திரியாக பதவியேற்றார்.
மும்பை:

மகாராஷ்டிர மாநில சட்டமன்றத் தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. பாஜக-சிவசேனா கூட்டணிக்கு பெரும்பான்மை இருந்தும் ஆட்சியமைப்பதில் இழுபறி நீடித்தது. பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படாத நிலையில், திடீரென பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வரானார். அவருடன் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அஜித் பவார்  துணை முதல்வரானார். 

ஆனால் அரசுக்கு பெரும்பான்மை இல்லாத நிலையில், இருவரும் பதவியை ராஜினாமா செய்தனர். அஜித் பவார் மீண்டும் தேசியவாத காங்கிரசுக்கே திரும்பினார். 

இதனையடுத்து திடீர் திருப்பமாக தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் சிவ சேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வரானார். அமைச்சரவை விரிவாக்கம் முழுமையாக நிறைவடையவில்லை.

இந்நிலையில் உத்தவ் தாக்கரே தலைமையிலான அமைச்சரவையை விரிவாக்கம் செய்வது தொடர்பாக, கூட்டணி கட்சிகளிடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு இறுதி செய்யப்பட்டது.



அதன்படி உத்தவ் தாக்கரே அமைச்சரவை, 32 நாட்களுக்குப் பிறகு இன்று விரிவாக்கம் செய்யப்பட்டது. கேபினட் மற்றும் துணை மந்திரிகள் என மொத்தம் 36 பேர் பதவியேற்றனர். 

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அஜித் பவார் துணை முதலமைச்சராக பதவியேற்றார். முன்னாள் முதல்வர் அசோக் சவான், சிவசேனாவின் வாரிசான உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் திலிப் வால்சே, தனஞ்செய் முண்டே, காங்கிரஸ் கட்சியின் விஜய் வதேட்டிவார் உள்ளிட்டோர் கேபினட் மந்திரிகளாக பதவியேற்றனர். அவர்களுக்கு ஆளுநர் கோஷ்யாரி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
Tags:    

Similar News