செய்திகள்
மாயாவதி

குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவாக பேசிய பகுஜன் சமாஜ் எம்.எல்.ஏ. கட்சியில் இருந்து நீக்கம்

Published On 2019-12-29 09:41 GMT   |   Update On 2019-12-29 11:25 GMT
குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த மத்திய பிரதேசம் மாநில பெண் எம்.எல்.ஏ.வை நீக்கியுள்ளதாக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி அறிவித்துள்ளார்.
லக்னோ:

குடியுரிமை சட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் சில மாநில அரசுகள் எதிர்மறையான நிலைப்பாட்டை கடைபிடித்து வருகின்றன.

அவ்வகையில், உத்தர பிரதேசம் மாநில முன்னாள் முதல் மந்திரியும் பகுஜன் சமாஜ் கட்சி தலைவருமான மாயாவதி  இந்த சட்டத்தை கடுமையாக எதிர்த்து வருகிறார்.



இந்நிலையில், மத்திய பிரதேசம் மாநில சட்டசபையில் பதாரியா தொகுதி எம்.எல்.ஏ.வாக பதவி வகிக்கும் பகுஜன் சமாஜ் கட்சி பெண் எம்.எல்.ஏ. ரமாபாய் பரிஹார் என்பவர் குடியுரிமை சட்டத்தை ஆதரித்தும் இவ்விவகாரத்தில் பிரதமர் மோடியை புகழ்ந்தும் கருத்து தெரிவித்திருந்தார்.

இதைத்தொடர்ந்து, தலைமையின் கட்டுப்பாட்டை மீறிய வகையில் செயல்பட்டதால் பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து ரமாபாய் பரிஹார் நீக்கப்பட்டதாகவும் அவர் கட்சி தொடர்புடைய நிகழ்ச்சிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் மாயாவதி தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று அறிவித்துள்ளார்.
Tags:    

Similar News