செய்திகள்
வைரல் வீடியோ ஸ்கிரீன்ஷாட்

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு அவர்களும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்களா?

Published On 2019-12-27 06:06 GMT   |   Update On 2019-12-27 06:06 GMT
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு அவர்களும் எதிர்ப்பு தெரிவிப்பதாக சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது.



சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ ஒன்று, இஸ்லாம் மதத்தினர் சீக்கியர்களாக வேடமிட்டு குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராடுவதாக தலைப்பிடப்பட்டுள்ளது. வைரல் வீடியோவில் காவல்துறை அதிகாரி, சீக்கியர் ஒருவரின் தலையில் இருந்து டர்பனை கழற்றி அவரை கைது செய்ய அழைத்து செல்லும் காட்சிகள் இடம்பெற்று இருக்கின்றன.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்படுகிறது. வீடியோவினை ஆய்வு செய்ததில் இந்த வீடியோ எட்டு ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்டது என தெரியவந்துள்ளது. அந்த வகையில் இந்த வீடியோவிற்கும் நாடு முழுக்க நடைபெறும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டங்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என உறுதியாகிறது.



வைரல் வீடியோ உண்மையில் 2011-ம் ஆண்டு பஞ்சாப் மாநிலத்தின் மொகாலியில் எடுக்கப்பட்டதாகும். வைரல் வீடியோவினை பல்வேறு யூடியூப் சேனல்கள், சீக்கியர் டர்பன் கழற்றப்பட்டுள்ளது என்ற தலைப்பில் பதிவேற்றம் செய்து இருக்கின்றன.

தவறான தலைப்பில் தற்போது வைரலாகும் வீடியோ எட்டு ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்டு இருப்பதால், குடியுரிமை திருத்த சட்டத்திற்கான எதிராக இஸ்லாமியர்கள் சீக்கியர்கள் வேடத்தில் போராட்டத்தில் ஈடுபடவில்லை என்பது உறுதியாகிவிட்டது.

போலி செய்திகளை பரப்பாதீர்கள். வலைத்தளங்களில் வரும் தகவல்களின் உண்மைத்தன்மை தெரியாமல் அவற்றை பரப்ப வேண்டாம். சமயங்களில் போலி செய்திகளால் உயிரிழப்பு உள்பட பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன.

Tags:    

Similar News