செய்திகள்
வைரல் வீடியோ ஸ்கிரீன்ஷாட்

வீடியோ உண்மை தான், ஆனால் அதற்கான காரணம்?

Published On 2019-12-26 06:33 GMT   |   Update On 2019-12-26 06:33 GMT
தேசிய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் எடுக்கப்பட்ட வீடியோ, தவறான தலைப்பில் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.



குடியுரிமை திருத்த சட்டத்திற்கு தொடர்பான, தொடர்பில்லாத புகைப்படம் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. நாடு முழுக்க குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்று வரும் சூழலே இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

அந்த வரிசையில் போலீசார் பொதுமக்களை கைது செய்து அழைத்து செல்லும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. வீடியோவில் கைது செய்யப்படுவோரின் பெயர்கள் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் இல்லாத காரணத்தால் போலீசார் அவர்களை கைது செய்வதாக கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவம் அசாமில் நடைபெற்றதாக வைரல் பதிவுகளில் கூறப்பட்டுள்ளது.



வைரல் வீடியோவினை ஆய்வு செய்ததில், இந்த சம்பவம் ஐதராபாத்தில் நடைபெற்றது தெரியவந்துள்ளது. உண்மையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டதால் வீடியோவில் இருந்தவர்களை போலீசார் கைது செய்தனர்.

அந்த வகையில் வைரல் பதிவுகளில் உள்ளதை போன்று தேசிய குடியுரிமை பதிவேட்டில் பெயரில்லாதவர்களை போலீசார் கைது செய்யவில்லை என்பதும், இந்த சம்பவம் அசாமில் நடைபெறவில்லை என்பதும் தெளிவாகி விட்டது. 

போலி செய்திகளை பரப்பாதீர்கள். வலைத்தளங்களில் வரும் தகவல்களின் உண்மைத்தன்மை தெரியாமல் அவற்றை பரப்ப வேண்டாம். சமயங்களில் போலி செய்திகளால் உயிரிழப்பு உள்பட பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன.
Tags:    

Similar News