செய்திகள்
சச்சின் தெண்டுல்கர்

தெண்டுல்கருக்கு ‘எக்ஸ்’ பிரிவு பாதுகாப்பு வாபஸ்

Published On 2019-12-25 08:41 GMT   |   Update On 2019-12-25 08:41 GMT
சச்சின் தெண்டுல்கருக்கு வழங்கப்பட்ட ‘எக்ஸ்’ பிரிவு பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது. இனி அவர் வெளியே செல்லும் போது மட்டுமே போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்படும்.
மும்பை:

மகாராஷ்டிரா மாநிலத்தில் அரசியல்வாதிகள், பிரபலமானவர்களுக்கு மாநில அரசு பாதுகாப்பு அளித்து வருகிறது.

45-க்கும் மேற்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் பாதுகாப்பை உத்தவ்தாக்கரே தலைமையிலான சிவசேனா கூட்டணி அரசு மாற்றி அமைத்துள்ளது.

கிரிக்கெட்டின் சகாப்தமான தெண்டுல்கருக்கு ‘எக்ஸ்’ பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது. இதன்படி போலீஸ்காரர் ஒருவர் அவருடன் 24 மணி நேரமும் பாதுகாப்பில் இருப்பார்.

தற்போது தெண்டுல்கருக்கு வழங்கப்பட்ட ‘எக்ஸ்’ பிரிவு பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது. இனி அவர் வெளியே செல்லும் போது மட்டுமே போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்படும்.

முதல் மந்திரி உத்தவ்தாக்கரேயின் மகனும், சிவசேனா எம்.எல்.ஏ.வுமான ஆதித்ய தாக்கரேவுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ‘ஒய் பிளஸ்’ பாதுகாப்பில் இருந்து அவருக்கு இசட் பாதுகாப்பு வழங்கப்படுகிறது.

இதேபோல சமூக ஆர்வலர் அன்னாஹசாரேவுக்கு பாதுகாப்பு ‘இசட்’ பிரிவாக உயர்த்தப்பட்டுள்ளது.
Tags:    

Similar News