செய்திகள்
உத்தவ் தாக்கரே அம்ருதா பட்னாவிஸ்

முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே குறித்து அம்ருதா பட்னாவிஸ் மீண்டும் விமர்சனம்

Published On 2019-12-25 01:51 GMT   |   Update On 2019-12-25 01:51 GMT
முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவை முன்னாள் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசின் மனைவி அம்ருதா பட்னாவிஸ் மீண்டும் விமர்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
மும்பை :

முன்னாள் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசின் மனைவி அம்ருதா, ‘‘தாக்கரேவின் பெயரை வைத்திருப்பவர்கள் எல்லோரும் பால் தாக்கரே ஆகிவிட முடியாது’’ என முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயை விமா்சித்து டுவிட்டரில் கருத்து பதிவிட்டிருந்தார். இதை கண்டித்து மராட்டியத்தின் பல இடங்களில் சிவசேனா மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அவர்கள் அம்ருதாவின் உருவப்படத்தை செருப்பால் அடித்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

இந்தநிலையில் இது குறித்த ஒரு படத்தை டுவிட்டரில் பதிவிட்ட அம்ருதா மீண்டும் உத்தவ் தாக்கரேயை விமா்சித்து கருத்து பதிவிட்டு உள்ளார். அதில் அவர், ‘‘மக்களின் தலையில் அடித்த நீங்கள் அவர்களை வழிநடத்த வேண்டாம். இது தலைமை அல்ல தாக்குதல்’’ என கூறியுள்ளார். அம்ருதாவின் இந்த கருத்து சிவசேனா தொண்டர்களை ஆத்திரம் அடைய செய்துள்ளது.

இந்தநிலையில் தலைவர்கள் மீதான விமர்சனங்களை கண்டு கொள்ள வேண்டாம் என சிவசேனாவினரை அக்கட்சியின் இளைஞர் அணி தலைவரும் எம்.எல்.ஏ.வுமான ஆதித்ய தாக்கரே கேட்டுக்கொண்டு உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டு இருப்பதாவது:-

அமைதியாகவும், கட்டுப்பாட்டுடனும், வலிமையாகவும் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி மக்களுக்கு சேவை ஆற்றி வருகிறோம். மக்களை வெல்வோம். விமர்சனங்கள் எப்படியும் தோல்வி அடையும். வேலை வாய்ப்புகளை பெருக்குவதும், பொருளாதாரத்தை உயர்த்துவதும் நமது வேலையாக இருக்கட்டும். சட்டம்- ஒழுங்கை போலீசார் பார்த்து கொள்வார்கள். யாரும் அதை கையில் எடுக்க வேண்டாம்.

தரங்கெட்ட விமர்சனங்களுக்கு மிரட்டல் விடுப்பதும், அவதூறாக பேசுவதும் நமது வேலை அல்ல.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News