செய்திகள்
உத்தவ் தாக்கரே - பிரதமர் மோடி

மராத்திக்கு செம்மொழி அந்தஸ்து கேட்டு உத்தவ் தாக்கரே பிரதமருக்கு கடிதம்

Published On 2019-12-24 15:17 GMT   |   Update On 2019-12-24 15:17 GMT
மராத்தி மொழிக்கு செம்மொழி அந்தஸ்து வழங்க வேண்டும் என மகாராஷ்டிரா முதல் மந்திரி உத்தவ் தாக்கரே, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
மும்பை:

மத்திய அரசின் சார்பில் தமிழ், சமஸ்கிருதம், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஒடியா ஆகிய மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், மராத்தி மொழிக்கு செம்மொழி அந்தஸ்து வழங்க வேண்டும் என மகாராஷ்டிரா முதல் மந்திரி உத்தவ் தாக்கரே, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இதுதொடர்பாக முதல் மந்திரி உத்தவ் தாக்கரே, பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:

மராத்தி மொழிக்கு செம்மொழி அந்தஸ்து வழங்க வேண்டும். மாநில அரசு இதுதொடர்பாக நிபுணர் குழுவை நியமித்துள்ளது. மத்திய அரசிடம் 2013, நவம்பர் 16-ம் தேதி அறிக்கையை சமர்ப்பித்துள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.
 
நீண்ட நாட்களாக நிலுவையில் இருக்கும் இந்த கோரிக்கையை பிரதமர் மோடி விரைந்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
Tags:    

Similar News